Wednesday 24 August 2011

அதிக கட்டணத்தை எதிர்த்து கேட்ட பெற்றோர்களை தாக்கிய ஆசிரியர்கள்.

அன்பார்ந்த தோழருக்கு வணக்கம்.

வேப்பேரியில் செவன்த் டே அட்வெண்டிஸ்ட் என்ற தனியார் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் அரசு நிர்ணயித்ததை விட அதிகமான கல்விக் கட்டணம் வசூலிக்கபடுகிறது. இதனை கண்டித்து இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், செவன்த் டே பள்ளி பெற்றோர் - மாணவர் சங்கம் தொடர் இயக்கங்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் சென்ற வாரம் வெள்ளிகிழமை, சமச்சீர் புத்தகத்துக்கான கட்டணத்தோடு அதிகமான பள்ளி கட்டணத்தையும் சேர்த்து வசூலித்துள்ளது, பள்ளி நிர்வாகம். இதனை எதிர்த்து கேட்ட பெற்றோர்களும் அப்பள்ளி சங்க நிர்வாகிகளும்மான செல்வராஜ், நாகராஜ் ஆகியோர் மீது கடுமையான தாக்குதலையும் கீழ்த்தரமான செயலையும் அப்பள்ளி பெண் ஆசிரியர்களும் ஊழியர்களும் நடத்தியுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யாமல் தாக்குதலுக்குள்ளான செல்வராஜ் மற்றும் நாகராஜ் ஆகியோரை கைது செய்த காவல்துறை, இதுகுறித்து புகார் அளிக்க சென்ற அப்பள்ளி பெற்றோர் சங்க தலைவர் புகழேந்தியையும் கைது செய்தது. இதனை கண்டித்து ஏராளமான பெற்றோர்களும் வாலிபர்-மாணவர் சங்கத்தினரும் காவல்நிலையத்தில் கூட ஆரம்பித்ததோடு, தாக்குதல் நடத்திய ஆசிரியர்களையும் ஊழியர்களையும் கைது செய்ய வலியுறுத்தினர். இதை கண்ட காவல்துறை, அம்மூவரையும் இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து ஜாமீனில் விடுவித்தது. ஆனால், இதுவரை நிர்வாக தரப்பில் இருந்து யாரையும் காவல்துறை கைது செய்யவில்லை.. இதனை இந்திய மாணவர் சங்கம் எழும்பூர் பகுதிகுழு வன்மையாக கண்டிக்கிறது.எதிர்வரும் 25.08.2010 அன்று மாலை 5 மணிக்கு புரசை தானா தெருவில் செவன்த் டே பள்ளி பெற்றோர் சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் கண்டன கூட்டத்திற்கு மாணவர்கள் பெருமளவில் கலந்து கொண்டு கண்டன குரல் எழுப்ப எழும்பூர் பகுதிக்குழு அழைப்பு விடுக்கிறது. ---எழும்பூர் பகுதிக்குழு

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More