தனியார் பள்ளி கட்டண கொள்ளையை தடுக்க வலியுறுத்தியும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்தாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மாநிலம் முழுவதும் இந்திய மாணவர் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டது. சென்னையில் பள்ளிக்கல்வி இயக்குநர் அலுவலகம் முன்பு நடந்த முற்றுகைப் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.